தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வ வெளியீடு

சென்னை:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

தமிழக வேட்பாளர் பட்டியல் என்று உத்தேச வேட்பாளர் பட்டியலை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று  வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று அகில இந்திய பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாஜக தமிழகத்தில்   5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை ஆகிய 5 தொகுதி களில் பாஜக  களமிறங்குகிறது..

கன்னியாகுமரி – பொன். ராதாகிருஷ்ணன்

கோவை – சி.பி.ராதாகிருஷ்ணன்

ராமநாதபுரம் – நயினார் நாகேந்திரன்

தூத்துக்குடி – தமிழிசை சவுந்தரராஜன்

சிவகங்கை – ஹெச்.ராஜா

கார்ட்டூன் கேலரி