வெளியானது ஆர்யாவின் ‘டெடி’ டீசர்…..!

சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டெடி’.

சதீஷ், கருணாகரன் இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. டி.இமான் இசையமைக்க, யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆர்யா. சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஆர்யா ஜோடியாக அவருடைய மனைவி சயீஷா நடித்துள்ளார்..

தனது திரைப்படங்களில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதை வழக்கமாக கொண்ட இயக்குநர் இந்த திரைப்படத்திலும் ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். அந்த வகையில் இந்த திரைப்படத்தில் டெடி எனப்படும் கரடி பொம்மை மனிதர்களுடன் சகஜமாக உரையாடுவது போல் திரைக்கதையினை அமைத்துள்ளார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீஸரினை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். டீசரை பார்க்கும் போதே நிச்சயம் குழந்தைகள் மத்தியில் படம் ரிஜிஸ்டர் செய்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் படத்தின் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ள இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.