சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படம் குறித்து சர்ப்ரைஸ் அப்டேட்…..!

சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஈஸ்வரன் டீசருக்கு வாழ்த்து தெரிவித்த வெங்கட் பிரபு ”ஈஸ்வரனுக்கு எங்கள் அப்துல் காலிக்கின் வாழ்த்துக்கள். விரைவில் மாநாடு ஃபர்ஸ்ட் லுக்” என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் மாநாடு படம் குறித்து பதிவிட்டுள்ளார். நாளை காலை 9.09 மணிக்கு, மாநாடு படம் பற்றிய ஸ்பெஷல் அறிவிப்பு வெளியாகும் என அவர் பதிவிட்டுள்ளார். இத்துடன் Get Ready STR Fans என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.