சென்னை:
ட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக திமுக எம்.பி.  ஜெகத்ரட்சகனிடம் சென்னை அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், அமலாக்கத்துறை அலுவலக அதிகாரிகளுக்கு சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக புகார் எழுந்தது. ரூ.65 கோடி அளவுக்கு சொத்து சேர்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அதன்பேரில் அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தினர். அதையடுத்து விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி,  சென்னை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அதிகாரிகள் அவரிடம் கடந்த புதன்கிழமை (ஜூலை 1ந்தேதி) சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக  விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ஜெகத்தட்சகனும் சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவருக்கு விரைவில் கொரோனா சோதனை நடத்தப்படும் என தெரிகிறது.