விசாகப்பட்டினம் கடலில் ரோந்து படகு தீ பிடித்து எரிந்தது! ஒரு வீரரை காணவில்லை

விசாகப்பட்டினம்:

விசாகப்பட்டினம் கடற்படைக்கு சொந்தமான ரோந்து படகுஒன்று திடீரென  தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணம் செய்த அனைவரும் தப்பிய நிலையில் ஒரு வீரரை மட்டும் காணவில்லை என  தெரியவந்துள்ளது. அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இன்று காலை 11:30 மணிக்கு கடலோர ரோந்து படகு ஒன்று விசாகப்பட்டினம் கடற்படைத் தளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது, அந்த படகில் இருந்து 29 பேர்  இருந்த நிலையில் அனைவரும் தண்ணீரில் குதித்தனர்.

இதுகுறிந்து தகவல் அறிந்த கடற்படையினர் பல படகுகளில் விரைந்து வந்து கடலில் குதித்த வீரர்களை மீட்டனர்.  அவர்களில்  28 பேர் மீட்கப்பட்ட நிலையில், ஒருவரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

காணாமல் போன ஒருவரை தங்களது குழுவினரோடு இந்திய கடலோரக் காவல்படையினர் தேடும் பணி நீடித்து வருகிறது. படகில் நெருப்பு பிடித்ததற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.