‘இந்தியில் பேசப்போகிறார் தமிழ் கடவுள்’

‘இந்தியில் பேசப்போகிறார் தமிழ் கடவுள்’

தமிழில் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய ‘’ ஓ மை கடவுளே’’ தரமான விமர்சனத்தையும், தாராளமான வசூலையும் ஒரு சேர சம்பாதித்த திரைப்படம்.

இது, அஸ்வத் மாரிமுத்துவுக்கு முதல் படம்.

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணிபோஜன்,ஷாரா ஆகியோருடன் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை மாரிமுத்து, இப்போது,தெலுங்கில் இயக்கி வருகிறார்.

இதனை முடித்து விட்டு ‘’ஓ மை கடவுளே’ படத்தை இந்தியிலும் இயக்க அஸ்வத் மாரிமுத்து திட்டமிட்டுள்ளார்.

நடிகர்கள்-நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை.

இதனிடையே ஊரடங்கு காலத்தில் புதிய தமிழ்ப் படத்துக்கான ’ஸ்கிரிப்ட்’ ஒன்றை முழுவதுமாக எழுதி முடித்துள்ளார், அஸ்வத்.

தமிழ் கடவுளைத் தெலுங்கில் பேசவைக்கும் அஸ்வத், எப்போது இந்தியில் பேச வைக்கப்போகிறார் என்பது முடிவாகவில்லை.

  • ஏழுமலை வெங்கடேசன்