ஓகி பாதிப்பு: ரூ.2000 கோடி ஒதுக்க பிரதமருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை,

கி புயல் பாதிப்புக்கு நிவாரணமாக   மத்திய அரசு நிதியிலிருந்து ரூ.2000 கோடி ஒதுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின்  பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 20 நாட்கள் ஆகியும் அங்கு இன்னும் நிவாரண பணிகள் முடியவில்லை. காணாமல் போன மீனவர்களின் கதி என்ன என்றும் தெரியவில்லை. அதே வேளையில் தமிழக அரசும் இதுவரை புயல்  நிவாரண மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கான மத்திய அரசு நிதியை கோரவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரிக்கு வருகை தரும் வேளையில், பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் வகையில் மத்திய அரசு நிதியிலிருந்து ரூ.2000 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். பிரதமரின் வருகையை பயன்படுத்தி தமிழக முதல்வர் மத்திய அரசின் உதவியை உடனே கோர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

You may have missed