நாகர்கோவில்,

டந்த வாரம் கன்னியாகுமரியை தாக்கிய ஓகி புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மீனவர்கள் மாயமாகினர். அவர்களில் ஏராளமானோர் என்ன ஆனார்கள் என்ற தகவல்கள் இதுவரை கிடைக்க வில்லை.

இந்நிலையில், கடலில் காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஓகி புயல் காரணமாக கடலில்  சிக்கிய மீனவர்களை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று  நேற்று முதல் அதிரடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று சுமார்  12 மணி நேரம் குழித்துறையில்   ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர் அரசின் வாக்குறுதியை ஏற்று கலைந்து சென்றனர்.

இந்நிலையில், இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசு மீனவர்களை உடனே மீட்க வேண்டும்; முதல்வர் எடப்பாடியார் உடனே வர வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து அந்த மக்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

மேலும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காவிட்டால் கேரளாவுடன் இணைவோம் என்கிற முழக்கத்தையும் அவர்கள் முன்வைத்து வருகின்றனர்.