நெல்லை,

ங்கக்கடலில் உருவான ஓகி புயல் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக ஆற்றின் கரையோரம் உள்ள  குறுக்குத்துறை முருகன் கோயில் மூழ்கியது.

ஓபி புயல் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான  கன்னியாகுமாரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் உள்ள  அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஆறுகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான தரைப்பாலங்கள் மூழ்கி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில்வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நெல்லை டவுனில் உள்ள  தரைப்பாலத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதன் காரணமாக ஆற்றங்கரையோரம் உள்ள  குறுக்குத்துறை முருகன் கோயில் வெள்ளத்தில் மூழ்கியது.

மேலும்,  கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.