ஓகி புயல் வலுவிழப்பு: தப்பித்தது மும்பை
மும்பை,
வங்கக்கடலில் உருவான ஓகி புயல் தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தை சின்னப்பின்ன மாக்கி நகர்ந்து சென்றது. லட்சத்தீவை நோக்கி சென்ற ஓபி மகாராஷ்டிராவில் நிலை கொண்டது.
இந்நிலையில், தற்போது ஓகி புயல் வலுவலுந்து வருவதால், மும்பை புயல் பாதிப்பில் இருந்து தப்பிப்பிழைத்து.
வங்கக் கடலில் இலங்கை அருகில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு வங்க அரசு ஓகி என பெயர் சூட்டியது. இந்த புய கன்னியாகுமரி, திருவனந்தபுரம் வழியாக லட்சத்தீவை நோக்கி சென்று மகாராஷ்டிராவில் நிலை கொண்டது.
நான்கு மாநிலங்களை மிரட்டிய ஓகி புயல் தற்போது வலுவிழந்து உள்ளதாக வானிலை மையம் அறவித்து உள்ளது.
மகாராஷ்டிராவில், மும்பை உள்பட கடற்கரை பகுதிகளில் ஓகி புயல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஓகி புயல் வலுவிலந்து காணப்படுவதாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது.
இருந்தாலும், மும்பையில் பலத்த மழை- கடல்அலைகள் ஆர்ப்பரிப்பு தொர்ந்து வருகிறது.