திருவனந்தபுரம்,

டந்த மாதம் 30ந்தேதி வங்க கடலில் உருவாக ஓகி புயல் வங்க கடலோர பகுதிகளான தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

அதுபோல கேரளாவின் கடற்கரை பகுதிகளான திருவனந்தபுரம், கொல்லம் போன்ற பகுதிகளும் பாதிக்கப்பட்டன. ஓகிபுயல் குறித்து மத்திய அரசு சரியான தகவல்கள் கொடுக்காததால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் பாதிப்புக்குளாகினர். இன்னும் பலர் கரை திரும்பாத நிலையில் அவர்களின் நிலை என்ன ஆனது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அதைத்தொடர்ந்து ஓகி புயலின்போது மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், பலர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று கேரள முதல்வர் பிரனாயி விஜயன் அறிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, கேரளா முழுவதும் சிபிஎம் கட்சியினர் உண்டியன் வைத்து மீனவர்களுக்காக நிதி வசூலித்தனர்.

இதன் மூலம்  ரூ 4 கோடியே 81 லட்சத்து 2511 வசூலானது. அதை சிபிஎம் கட்சி கேரள அரசுக்கு அளித்துள்ளது. கேரள சிபிஎம்ன் இந்த முயற்சி நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.