நாகர்கோவில்,

கி புயல் காரணமாக கடுமையாக சேதத்துக்கு உள்ளான கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓபி புயல் பாதித்த பகுதிகளை தேமுதிக மகளிர் அணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டு வருகிறார்.

அப்போது, ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பர் 30ந்தேதி வீசிய ஓகி புயலில் சிக்கி கன்னியாகுமரி மாவட்டம் சின்னாப்பின்னமானது. கடலுக்கு மீன் பிடிக்க  சென்ற 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவர்களது நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், பல மீனவர்கள் புயலில் சிக்கி மரணத்தை தழுவினர்.

ஓகி புயல் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர், பிரதமர் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும், நிவாரணமும் வழங்கினார்.

இந்நிலையில், தேமுதிக சார்பில், பிரேமலதா விஜயகாந்த், ஓகி புயல் பாதிப்பு நடைபெற்று ஒருமாதம் முடிவடைந்த நிலையில், தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிப்புகள் குறித்து விசாரித்து வருகிறார். அங்கு பாதிக்கப்பட்ட மீனவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய பிரேமலதா, பேரிடர் பாதித்த மாவட்டமாக கன்னியாகுமரியை அறிவிக்க வேண்டும்; புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் சமமாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினார்.