திருவனந்தபுரம்:

ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், நிலைமையை சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஓகி புயலால் தமிழகம் மற்றும் கேரளா கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில் ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக

திருவனந்தபுரத்தில் தலைமை செயலகத்தில் முதல்வர் பினராயி விஜயனுடன் அல்போன்ஸ் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில்,‘‘மாநில அரசுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் மத்திய அரசு வழங்கிவிட்டது.

புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய அரசிடம் எந்தவித திட்டமும் இல்லை. புயல் பாதிப்பு குறித்த எச்சரிக்கை நவம்பர் 30-ம் தேதி அன்று தான் கிடைத்தது. முன்கூட்டி எந்த அறிவிப்பும் இல்லை’’ என்றார்.