சட்டவிரோத பைக் டாக்ஸி சேவையை நடத்திய ஓலா நிறுவனத்துக்கு அனுமதி அளித்ததில் அரசியல் அழுத்தம் இல்லை: பெங்களூரு சாலை போக்குவரத்து ஆணையர்

பெங்களூரு:

சட்டவிரோதமாக பைக் டாக்ஸியை இயக்கியதற்கு விதிக்கப்பட்ட ரூ.15 லட்சம் அபராதத்தை ஓலா நிறுவனம் கட்டியது. இதனையடுத்து, பைக் டாக்ஸி சேவையை தொடர பெங்களூரு சாலைப் போக்குவரத்து ஆணையர் அனுமதி கொடுத்தார்.


பெங்களூருவில் அனுமதி இன்றி பைக் டாக்ஸியை ஓலா நிறுவனம் இயக்கி வந்தது. இதனையடுத்து, அந்நிறுவனத்தின் லைசன்ஸ் 6 மாதங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில்,அந்நிறுவனம் ரூ.15 லட்சம் அபராதம் செலுத்தினால், பைக் டாக்ஸி சேவையை தொடரலாம். லைசன்ஸும் தொடரும் என்று பெங்களூரு சாலை போக்குவரத்து ஆணையர் அறிவித்தார்.

இதனையடுத்து, ரூ.15 லட்சம் அபராதத்தை ஓலா நிறுவனம் செலுத்தியது. இதனையடுத்து, பைக் டாக்ஸியை சேவை தொடர அனுதியளிக்கப்பட்டது.

இதற்கிடையே இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு சாலைப் போக்குவரத்து ஆணையர் விபி. இக்கேரி, 6 மாதம் லைசன்ஸை நிறுத்திவிட்டு, 30 நாட்களில் மீண்டும் லைசன்ஸ் கொடுத்ததில் அரசியல் அழுத்தம் இருப்பதாக கூறப்படுவதை மறுத்தார்.
ஓட்டுநர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.