ராகுல் காந்தியின் தலைமையை முடிக்க சதி செய்யும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள்- சிவசேனா குற்றச்சாட்டு

புதுடெல்லி: 
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியை முழுநேர கட்சித் தலைவராக பொறுப்பேற்குமாறு மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் 23 பேர் கடிதம் எழுதியுள்ளனர், ஆனால் இது ராகுல் காந்தியின் தலைமையை முழுமையாக முடிக்க செய்யப்படும் சதி என்று சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு சவாலாக கருதப்பட்ட 23 காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய இந்த கடிதம்,  காங்கிரஸ் கட்சியை சார்ந்த  ஒரு முக்கிய குழுவின் பல மாத கலந்துரையாடலுக்கு பிறகு வெளி வந்துள்ளது என்று தெரியவந்திருக்கிறது. இது ராகுல் காந்தியின் தலைமையை முழுமையாக முடிக்க செய்யப்பட்ட சதி என்று சிவசேனா தற்போது குற்றம்சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்குள் பல தலைவர்கள் இணைந்து ராகுல் காந்தியின் தலைமையை முடக்க சதி செய்து வருகிறார்கள்,  இந்த சதியை இதுவரை பாஜாகா கூட செய்திருக்காது  என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தியின் தலைமையை முடிக்க நினைக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் எவரும் மாவட்ட அளவிலான தலைவர்களாக கூட இல்லாமல், காங்கிரஸ் கட்சியின் உதவியினால் நேராக முதலமைச்சரோ அல்லது மத்திய அமைச்சர்கள் ஆனவர்கள்.
மேலும் பல மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியை சார்ந்த முதலமைச்சர்கள் தங்கள் வேலையில்  மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்கள், காங்கிரஸ் கட்சியின் மீது அதிக கவனம் செலுத்தவில்லை. ஆனால் சிலர் மட்டுமே இந்த சதியை செய்கிறார்கள் இது ஒரு அரசியல் கொரோனா வைரஸ் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.