கொடூரம்: கஜா புயல் பகுதியில் மூதாட்டியை மருத்துவமனைக்கு அனுமதிக்க மறுத்து அராஜகம்! பெண் கதறல் வீடியோ

ஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு நிவாரணப்பணிகள் விரைவாக நடக்கவில்லை என்று கோரி ஆங்காங்கே சிலர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் உள்ளூர் மக்களும், நிவாரணப்பொருட்கள் கொண்டு செல்லும் தன்னார்வலர்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

நேற்றும் திருத்துறைப்பூண்டி அருகே பாம்பனி கிராமத்தில் சுமார் பத்து பேர் சாலை மறியல் என்ற பெயரில் சாலையில் நடுவில் அமர்ந்து வாகனங்கள் செல்வதைத் தடுத்தனர். இதனால் சுமார் நான்கு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இரு புறமும் பேருந்துகள், நிவாரணப்பொருட்கள் ஏற்றிய வாகனங்கள் என்று நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லமுடியாமல் நின்றன.

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் தங்கள் இடங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவரும் பேருந்தில் பயணம் செய்தார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவி செய்ய தனது காரில் அங்கு சென்றிருந்த நடிகர் அபி சரவணன், தனது காரில் மூதாட்டியை ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றார். ஆனால் அதற்கும் மறியல்காரர்கள் மறுத்துவிட்டனர். பிறகு அவர்களுடன் வாதாடி, மூதாட்டியை மருத்தவமனைக்கு அழைத்துச் சென்றார்.

“புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகள் உரிய வேகத்தில் நடைபெறவில்லை என்பது உண்மைதான். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தவறல்ல. ஆனால் வேண்டுமென்றே சிலர் அரசியல் உள் நோக்கத்துடன் சாலை மறியல் செய்கிறார்கள். இதனால் உள்ளூர் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இன்னமும் பல சாலைகளில் மரங்கள் விழுந்து கிடக்கின்றன. சில சாலைகளில் மட்டுமே போக்குவரத்து நடக்கிறது. அதிலும் சிலர் சாலை மறியல் என்கிற பெயரில் மக்களுக்கு இடையூறு செய்கிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும்” என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

சாலை மறியல் என்ற பெயரில் மூதாட்டியை மருத்துவமனைக்கு அனுப்ப மறுத்தது  குறித்து அவரது உறவினர் பேசிய வீடியோ: