பத்து வயது சிறுமி பலாத்காரம்…  பேத்தியைப் பயன்படுத்தி பயங்கரம்…

--

பத்து வயது சிறுமி பலாத்காரம்…  பேத்தியைப் பயன்படுத்தி பயங்கரம்…

பெரியார் பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் 58 வயதான தினக்கூலி ஜஹாங்கீர். கடந்த வாரம் ஜஹாங்கீர் தனது பேத்தியிடம் அவரது பத்து வயது தோழியைப் பார்க்க வேண்டும் என்று கூறி வீட்டுக்கு அழைத்து வரச்சொல்லியுள்ளார்.  அவரது பேத்தியும் அதே போலத் தனது தோழியை அவர்கள் வீட்டில் தெரிவித்துவிட்டு அழைத்து வந்துள்ளார்.  பின்னர் தனது வீட்டிலேயே வைத்து அச்சிறுமியை வன்புணர்வு செய்துள்ளார்.

இதுபற்றி அச்சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்தது மேலும் தைரியத்தைக் கொடுக்க, மீண்டும் இரண்டு மூன்று தடவைகள் இக்கொடூரத்தைத் தொடர்ந்துள்ளார்.  இம்முறை அச்சிறுமி. சனிக்கிழமையன்று குறிப்பிட்ட இடத்தில் வலிப்பதாகப் பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் என்ன நடந்தது என விசாரிக்கையில் தான் இந்த அவலம் நடந்தது வெளியே தெரிந்துள்ளது.

உடனடியாக இதுபற்றி அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர் பெற்றோர்.  புகாரைப் பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா பாய் அன்றே விசாரணை மேற்கொண்டு குற்றவாளியைக் கைது செய்துள்ளார்.

 – லெட்சுமி பிரியா