சென்னை:

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் சிஏஏக்கு எதிரான  போராட்டத்தில் இஸ்லாமிய பெரியர் ஒருவர்  இறந்ததாக சில அமைப்பினரால் வதந்தி பரபரப்பப்பட்ட நிலையில்,  தமிழகம் முழுவதும் இரவு முதலே இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு உள்ளானார்கள். இரண்டு நாள் விடுமுறை காரணமாக, சொந்த ஊர்களுக்கு சென்ற ஏராளமான வாகன ஓட்டிகள் பெரும் துயருக்கு ஆளானார்கள்… இன்றும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுவதால் பரபரப்பும், பற்றமும் நிலவி வருகிறது.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றன. டெல்லியில் இந்த போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்திலும் சிஏஏக்கு எதிரான போராட்டத்தை இஸ்லாமியர்கள் முன்னெடுத்து வருகின்றனர். நேற்று சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின்போது, பாதுகாப்புக்காக நின்றிருந்த காவல்துறையினர் மீது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றது. இதையடுத்து, கூட்டத்தினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற இஸ்லாமிய அமைப்பு, போலீசாரின் தடியடியால் முதியவர்  இறந்ததாக வதந்தி பரப்பி மக்களிடையே போராட்டத்தை தூண்டி வருகிறது…

70 வயது மதிக்கத்தக்க இந்த பெரியவர் இயற்கையாக மரணடைந்ததை நேற்று வண்ணாரப்பேட்டையில் சிஏஏ போராட்டத்தின் போது இறந்தவிட்டதாக சிலர் தவறுதலாக, வேண்டுமென்றே பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது…