செக்ஸ் குறும்பு: முதியவர் கைது

சென்னை:

ள்ளி சிறுமிகளிடம் செக்ஸ் குறும்பு செய்த 66 வயது இளைஞர்  கைது செய்யப்பட்டார்.

arrest

சென்னை எம்.ஜி.ஆர் நகர் கண்ணகி தெருவை சேர்ந்தவர் 66 வயதான ஜெயக்குமார். இவர்  ராயப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள சிறுமிகளிடம் சகஜமாக பேசி பழகினார். வயதானவர் என்பதால் சிறுமிகளும் அவரிடம் ‘தாத்தா தாத்தா’ என அன்பாக பேசினார்.

சம்பவத்தன்று  6-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் 2     சிறுமிகளை  தனியாக அழைத்து அவர்களிடம் ‘செக்ஸ்’ குறும்பில் ஈடுபட்டுள்ளார். சிறுமிகளின் அலறல்  சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். பெரியவரை பிடித்து  ‘தர்ம அடி’ கொடுத்து ராயப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.