மும்பை: பழைய வரிசை ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக வெளியான தகவல்களுக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு கட்டுபடுத்தப்பட்டது. பின்னர் அச்சடிப்பு பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டது.

தற்போது 100, 10 மற்றும் 5 ரூபாய் நோட்டுகளில் பழைய வரிசை நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற போவதாக தகவல்கள் வெளியானது. இந் நிலையில் பழைய வரிசை ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதா வெளியான தகவல்களுக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில், 100, 10, 5 ரூபாயின் பழைய வரிசை நோட்டுகளை திரும்பப் பெறப் போவதாக வெளியான தகவல் தவறானது. பழைய வரிசை ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்ல என்று தெரிவித்துள்ளது.