அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்ஷன் திட்டம் : டில்லி முதல்வர்

டில்லி

ரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமுல் படுத்தும் தீர்மானம் விரைவில் டில்லி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கடந்த 2004 ஆம் ஆண்டு புதிய பென்ஷன் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் ப்டி அரசு ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அரசு சார்பில் அதே அளவு தொகையும் அத்துடன் சேர்க்கப்படும். சேர்ந்த தொகையை நிதி மேலாளர்கள் முதலீடு திட்டங்களில் முதலீடு செய்வார்கள். இதன் மூலம் கிடைக்கும் வருவாயையும் சேர்த்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்கப்படும்.

பழைய பென்ஷன் திட்டப்படி ஊழியர்களின் ஊதியத்தில் பணம் பிடிக்கப்படுவதில்லை. இதனால் நாடெங்கும் உள்ள அரசு ஊழியர்கள் இந்த புதிய பென்ஷன் முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டில்லியில் நேற்று அனைத்திந்திய ஆசிரியர் சங்கம் ஒரு பேரணியை ராம் லீலா மைதானத்தில் நடத்தியது. இந்த பேரணியில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசும் போது இந்த பென்ஷன் திட்டம் பற்றி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவால், “டில்லி மாநில அரசு ஊழியர்களுக்கும் மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த எண்ணி உள்ளோம். சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்ற எண்ணியுள்ளோம். பேரவையில் தீர்மானம் நிறைவேறிய பிறகு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்போம். ஒப்புதலை அளிக்க வலியுறுத்தி போராட நாங்கள் தயாராக உள்ளோம்.

அத்துடன் மேற்கு வங்கம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநில முதல்வர்களிடமும் பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என கோருவேன். அரசு ஊழியர்களால் ஒரு அரசாந்தத்தை மாற்றி அமைக்கும் வலு உள்ள்ளது. அதனால் இன்னும் மூன்று மாதங்களுக்குள் அரசு ஊழியர்களின் கோரிக்கைய நிறைவேற்றாவிட்டால் வரும் 2019 தேர்தலில் மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள் என மத்திய அரசை எச்சரிக்கிறேன்.” என பேசி உள்ளார்.