மதுக்கோப்பையுடன் டேபிளில் படுத்திருக்கும் மீரா மிதுன்: சமூக வலைதளத்தை கலக்கும் வைரல் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரபல மாடல் மீரா மிதுன், மதுக்கோப்பையை கையில் வைத்தபடி இருக்கும் பழைய போட்டோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபலா மாடலான மீரா மிதுன், சில திரைப்படங்களிலும் நடத்திருக்கிறார். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில், சிறப்பு போட்டியாளராக மீரா மிதுன் கலந்துக்கொண்டார். 5 வாரங்களாக தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் வசித்த அவர், கடந்த சனிக்கிழமை மாலை பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் அதிகமாக ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தவர்களில் வனிதா விஜயகுமாருக்கு அடுத்தபடியாக பார்க்கப்படுவர் மீரா மிதுன்.

இந்நிலையில், கடந்த ஆண்டு திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்காக நடத்தப்பட்ட போட்டோ ஷுட் ஒன்றில், டேபிள் மீது படுத்துக்கொண்டு, கையில் மதுக்கோப்பையை ஏந்திய படி மீரா மிதுன் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி மீராவால் வெளியிடப்பட்ட இந்த புகைப்படம், சுமார் ஓராண்டுக்கு பின்னர் தற்போது வைரலாகி வருகிறது.

கார்ட்டூன் கேலரி