டில்லி:

ம்மு காஷ்மீர், ராம்கோவில் விவகாரங்களில் பாஜகவின் இரட்டை முகமான முகமூடியை கிழித்து தொங்கவிட்டுள்ள, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமியின் பேட்டி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது. மோடி அரசின் இந்த முடிவுக்கு தற்போது ஆதரவு தெரிவித்து வரும் சுப்பிரமணியசாமி, முன்னாள் அவர் ஜனதாக் கட்சித்தலைவராக இருந்தபோது,  சட்டப்பிரிவு 370, ராம்மந்திர் விவகாரம் குறித்து, தூர்தர்ஷன் டிவி சேனலுக்கு  அளித்த பிரத்யேக பேட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், பாஜகவின் பாசாங்குத்தனத்தை அவர் தோலூரித்துக் காட்டி உள்ளார்.

தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக உள்ள சுப்பிரமணியசாமியிடம் கடந்த சில ஆண்டுகளாக இந்துத்துவாக கொள்கையில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், பல ஆண்டு களுக்கு முன்பு அவரிடம் பிரத்யேக பேட்டி கண்ட தூர்தர்ஷன் பத்திரிகையாளர் வினோத் துவாவுடன் சுவாமி கலந்துரையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

இதில், சுவாமி தனது தற்போதைய கட்சியான பாஜகவை அதன் பாசாங்குத்தனத்தையும், இந்திய முஸ்லிம்களை வீழ்த்துவதற்கான காவி கட்சியின் முயற்சிகளையும் எடுத்துரைக்கிறார். பாஜகவை கடுமையாக சாடியுள்ள சுவாமி, . பாஜகவின் தேசியவாத முத்திரை ‘முற்றிலும் எதிர்மறையானது’ என்றும், இது முஸ்லிம்களின் நலன்களை புண்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

“தேசியவாதம் பற்றிய பாஜகவின் வரையறையின் சிக்கல் என்னவென்றால், அது முற்றிலும் எதிர்மறையானது. முஸ்லிம்கள் எவ்வளவு இழக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் இது வரை யறுக்கப்படுகிறது. அவர்களின் அனைத்து நிகழ்ச்சிகளும் நீங்கள் முன்னிலைப்படுத்தினால், அவை அனைத்தும் அதை நோக்கியே இருக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து பேசியவர்,  370 வது பிரிவில் பாஜகவின் முகமூடியை தோலூரித்துக் காட்டுகிறார்.  “எடுத்துக்காட்டாக சட்டப் பிரிவு  370 ஐ எடுத்துக் கொள்ளுங்கள். இது குறித்து பாஜக பேசுவார்கள். ஆனால், வடகிழக்கு மாநிலங்களுக்கான சட்டப்பிரிவு  371 குறித்து, ஒருபோதும் பேச மாட்டார்கள் ” என்று கூறி உள்ளார்.

அதுபோல அயோத்தி பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்துள்ள சுவாமி,  “ராம் மந்திர் குறித்து பேசுவார்கள்,  ஆனால்,  கைலாஷ் மன்சரோவரைப் பற்றி அவர்கள் பேசமாட்டார்கள், இது எங்களுக்கு பவித்ரா(பக்தியுள்ள)மாகும். எனவே, அவர்களின் (பிஜேபியின்) முழுத் திட்டமும் எந்தவொரு ஆக்கபூர்வமான திட்டங்களின் அடிப்படையிலும்  இல்லை, மாறாக முஸ்லிம்களை எவ்வாறு வீழ்த்த முடியும் என்பதன் அடிப்படையில்”தான் உள்ளது என்று பாஜகவின் இரட்டை முகத்தை உடைத்து உண்மையான முகத்தை காட்டியுள்ளார்.

இந்த நேர் காணலை வைத்துப் பார்க்கும்போது, அந்த சமயத்தில்,  சாமி தன்னை இந்துத்துவா பிரதிநிதியாகவோ,  முஸ்லீம் மீதான மத துவேசமுடனோ காணப்படவில்லை என்பது தெளிவாகி உள்ளது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் சுவாமி  இந்துத்துவ சித்தாந்தத்தின் முகமாக உருவெடுத்துள்ளார், அவரது நோக்கம், இந்துக்களை  ஊக்குவிப்பதையும் இந்தியாவின் முஸ்லீம் சமூகத்தை பலவீனப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சுப்பிரமணியசாமி வீடியோ…