35 ஆண்டுகள் கழித்து ப்ளஸ்டூ பாஸ்..

35 ஆண்டுகள் கழித்து ப்ளஸ்டூ பாஸ்..

மேகாலயா மாநிலம் ரீ பாய் மாவட்டத்தைச் சேர்ந்த லெகின்யூ சீம்லிb என்ற பெண், ஐம்பதைக் கடந்தவர்.

35 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப்படிப்பைப்  பாதியில் நிறுத்தியவர்.

கணித புத்தகத்தை  எடுத்தாலேயே அவருக்கு அப்போது தலைவலி வந்து விடுமாம்.

இதனால் படிப்புக்கு ’குட்பை’’ சொன்னவருக்கு , கல்வி மீதான ஆசை மட்டும் குறையவில்லை.

கடந்த 2015 ஆம் ஆண்டு ’பாட்டி’ சீம்லீ மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார்.

தொலைதூர வழிக்கல்வியில் பயின்று, அண்மையில் மேகாலயா மாநில மேல்நிலை கல்வித்துறை நடத்திய பன்னிரண்டாம்  வகுப்புத் தேர்வை எழுதினார்.

திங்கள் கிழமை ரிசல்ட்.

நல்ல மதிப்பெண்கள் பெற்று சீம்லி ’பாஸ்’ ஆனதாக கல்வித்துறை ’’வெப்சைட்’’ அறிவித்துள்ளது.

‘’படிப்புக்கு வயது ஒரு தடை அல்ல’’ என்று அந்த மாநில கல்வி அமைச்சர் , பாஸ் ஆன பாட்டிக்குப் புகழ்மாலை சூட்டியுள்ளார்.

-பா.பாரதி.