Random image

கொல்கத்தாவில் பழமையான மேம்பாலம் இடிந்து விழுந்தது…மீட்பு பணி தீவிரம்

கொல்கத்தா:

கொல்கத்தாவில் பழயை£ன மேம்பாலம் இடிந்து விழுந்தது. 6 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் இன்று மாலை பழமையான மெஜெர்காத் பாலம் இடிந்து விழுந்தது.இதில் பாலத்தின் மேற்பகுதியில் சென்ற வாகனங்களும், கீழே சென்ற வாகனங்களும் சிக்கியது. மேற்பகுதியிலிருந்த வாகனங்கள் உடனடியாக மீட்கப்பட்டது.

கீழ்பகுதியில் சிக்கியுள்ள வாகனங்களை மீட்க தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீயணைப்பு படை, மீட்பு குழு, போலீசார் மீட்டு பணிகளில் ஈடுபட்டள்ளனர். காயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இடிபாடுகளுக்குள் யாரும் சிக்கியிருக்கிறார்களா? என்பதை தேடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டார்ஜிலிங்கில் உள்ளார். விமானம் இல்லாத காரணத்தினால் இரவே கொல்கத்தாவிற்கு திரும்ப முடியாது என வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,‘‘நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம், மீட்பு குழுவிடம் தொடர்ந்து தகவல்களை பெற்று வருகிறோம்.முடிந்தவரையில் அங்கு விரைவாக செல்ல வேண்டும் என முயற்சி செய்கிறோம். இப்போது விமானம் கிடையாது, எனவே திரும்ப முடியவில்லை.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரிவான விசாரணை நடத்தப்படும். மீட்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தை மாநில அமைச்சர்கள் பார்வையிட்டு மீட்டு பணிகளை கண்காணித்து வருகின்றனர். அமைச்சர் பிர்காத் ஹகிம் கூறுகையில், “பாலத்தில் சிக்கியவர்கள் அனைவரும் மீட்கப்பட்டார்கள். பாலம் 40 ஆண்டுகள் பழமையானது. இப்போது எந்தஒரு உயிரிழப்பும் கிடையாது. இருப்பினும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.