கொரோனா தொற்றிலிருந்து முற்றிலுமாக குணமடைந்த ஜேம்ஸ் பாண்ட் நடிகை ஓல்கா குரிலென்கோ…!

கொரோனா வைரஸ் உலகில் 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியுள்ளன.

கொரோனா வைரஸால் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக உலக சுகாதார நிறுவனம் நான்கு மருந்துகளை மெகா சோதனை முறையில் பரிசோதிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜேம்ஸ் பாண்ட் நாயகி ஓல்கா குரிலென்கோ என்ற நடிகை தனக்கு கோவிட் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த ஓல்கா குரிலென்கோ தற்போது தான் முற்றிலுமாக குணமடைந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.