ஜேம்ஸ் பாண்ட் நட்சத்திரம் ஓல்கா குர்லென்கோவுக்கு கொரோனா….!

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி தற்போது வரை கொரோனாவால் 7529 பேர் பலியாகி உள்ளனர். 184, 976 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

ஜேம்ஸ் பாண்ட் நட்சத்திரம் ஓல்கா குர்லென்கோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட வில்லை.

திங்களன்றும் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர், “கொரோனா வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்தபின் வீட்டில் நான் பூட்டப்பட்டேன். உண்மையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன் கிட்டத்தட்ட ஒரு வாரம். காய்ச்சல் மற்றும் சோர்வு என் முக்கிய அறிகுறிகள். உங்களை கவனித்துக் கொள்ளுங்கள். இதை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்” எனக் பதிவிட்டு இருந்தார்.

கடந்த ஆண்டு வுஹானில் (சீனா) தோன்றிய கொரோனா வைரஸ், உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு தொற்றுநோயாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 137 பேருக்கு COVID – 19 தொற்று இருப்பது உறுதிப் படுத்தப்பட்டு உள்ளன. தொற்றுநோய் காரணமாக பல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களின் வெளியீடுகள் காலவரையின்றி மாற்றப்பட்டுள்ளன.