ஒலிம்பியாட் செஸ் போட்டிக்கு தயாரகி வரும் விஸ்வநாதன் ஆனந்த்

ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் செஸ் வளர்ச்சியை பிரதிபலிக்கும் என்று விஸ்வநாதன் ஆனந்த் கூறியுள்ளார். இரண்டு மாதங்களுக்கு பிறகு ஜியார்ஜியாவில் நடக்க இருக்கும் ஒலிம்பியாட் செஸ் போட்டியில் பங்கேற்க விஸ்வநாதன் ஆனந்த் தயாராகி வருகிறார்.

viswanathan

விஸ்வநாதன் ஆனந்த் தான் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர். தனது திறமைகளை வெளிப்படுத்தி சர்வதேச அளவில் சாம்பியனாகி விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவிற்கு பெருமை தேடிக் கொடுத்தார். அவரின் இடத்தை அடைவதற்கு கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் தேவைப்பட்டன. தற்போது 12 வருடம் 10 மாதங்கள் நிரம்பிய இந்தியவை சேர்ந்த ஆர். பிரகானந்தா உலகின் இரண்டாவது கிராண்ட் மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதே போல் ரஷ்யாவை சேர்ந்த செர்ஜி கர்ஜாகின் 12 வருடங்கள் 7 மாதங்கள் கடந்த நிலையில் உலகின் மிக இளம் வயது கிராண்ட் மாஸ்டராக சாதனை படைத்துள்ளார்.

உலகின் 2வது இளம் கிராண்ட் மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரகானந்தாவை பற்றி ஆனந்த் கூறும் போது, ” செஸ் போட்டியில் வயது வித்யாசம் தேவைப்படுவதில்லை, 12வயது நிரம்பினால் அவர்கள் போட்டிக்கு தகுதி பெற்று விடுகின்றனர். தற்போது 11 வயது நிரம்பியவர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் திறமைமிக்க இளம் போட்டியாளர்கள் முன்னோக்கி வளர உதவுகிறது. இருப்பினும், ஒரு சிறந்த கிராண்ட் மாஸ்டர் உருவாவதற்கு சில காலங்கள் தேவைப்படும்” என்று கூறினார்.

உலக செஸ் தரவரிசை பட்டியலில் ரஷ்யாவை சேந்த கர்ஜாகின் 10வது இடத்திலும், பெண்ட்லியா ஹரிகிருஷ்னா 22வது இடத்திலும், விதித் குஜராத்தி 29 இடத்திலும் உள்ளனர். பெண்ட்லியா மற்றும் விதித் குஜராத்தி ஆகிய இருவரும் தனக்கு மிகவும் நெருங்கியவர்கள் என்று குறிப்பிடும் ஆனந்த் நாங்கள் அனைவரும் ஒரே வரிசையில் இருந்துள்ளோம் என்று கூறினார்.

2018ம் ஆண்டு நடக்க இருக்கிற ஒலிம்பியாட் போட்டி குறித்து ஆனந்த் பேசுகையில் “ கடைசியாக நடைபெற்ற இரண்டு ஒலிம்பியாட் போட்டிகள் நன்றாக இருந்தது. இந்த வருடம் நடக்க இருக்கிற போட்டியில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்திய அணி அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

நான் முதன் முதலாக 1987ம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டேன். அதன்பிறகு 52 கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர். இது தொடர்ச்சியான வளர்ச்சியை எட்டியுள்ளது, இந்த ஒலிம்பியாட் போட்டியில் கட்டிப்பாக இந்தியாவை சேர்ந்த வீரர்கள் சாதனைப் படைப்பார்கள் என்று நம்புகிறேன் “ என ஆனந்த் கூறினார்.