ஒலிம்பிக் 2020: அதிகாரப்பூர்வ சின்னம் வெளியீடு

டோக்கியோ:

2020 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னத்தை ஐப்பான்  வெளியிட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அதைத்தொடர்ந்து அடுத்த ஒலிம்பிக் போட்டி  ஜப்பானில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி வரும் 2020ம் ஆண்டில் ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. 2020ம் ஆண்டு ஜூலை 24ந்தேதி முதல் ஆகஸ்டு 9ந்தேதி வரை போட்டிகள் நடைபெறும் போட்டிக்கான அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.

டோக்கியோ 2020ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் சின்னம்

முன்னதாக இந்த ஒலிம்பிக் போட்டி சின்னம் தொடர்பாக ஜப்பான் அரசு, நாடு முழுவதும் பல்வேறு அமைப்[பகளிடம்  சின்னம் தயாரிக்க கோர யிருந்தது.  அவ்வாறு வரப்பெற்ற சின்னங்களில் ஒன்றை  அரசு தொடக்கப்ள்ளி மாணவர்களின் மூலம் தேர்வு  செய்து முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து. ஜப்பானின் கவர்னர் யூரிகோ. ஒலிம்பிக் அதிகாரப்பூர்வ ஏற்பாட்டுக்குழு தலைவர் யோஷிரோ மோடி ஆகியோர்  டோக்கியோ ஒலிம்பிக்  போட்டியின்  அதிகாரப்பூர்வ சின்னத்தை  அறிமுகம் செய்து வைத்தனர்.

அந்த சின்னத்தில்,   நீலம், சிகப்பு என இரண்டு நிறம், இரண்டு அமைப்புகளில் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் மிரைட்டோவா ( Miraitowa)  என பெயரிடப்பட்டுள்ள நீல நிற சின்னம் ஒலிம்பிக் தொடருக்கும் சொமைட்டி (Someity)  என பெயரிடப்பட்டுள்ள சிகப்பு நிற சின்னம் பாராலிம்பிக் தொடருக்கும் என அதிகாரிகள்  தெரிவித்து உள்ளனர்.