உலகக்கோப்பை ஹாக்கி: 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் அர்ஜென்டினா அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.

argentina

14வது ஆண்கள் உலகக் கோப்பை தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு மையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, அர்ஜென்டினா, ஸ்பெயின் உட்பட 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றான. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சி பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி வெற்றிப்பெற்றது.

இந்நிலையில் 2வது நாளாக நடைபெற்ற இன்றைய போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. போட்டி தொடங்கிய 3வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி சார்பாக கான்செலஸ் முதல் கோல் அடித்தார். அதற்கு அடுத்த நிமிடத்தில் அர்ஜென்டினாவின் அகஸ்டின் மாசெல்லி ஒரு கோல் அடித்து அணியை சமன் செய்தார்.

தொடர்ந்து ஆட்டம் விறுவிறுப்பாக செல்ல ஸ்பெயின் வீரர் ஜோசபின் மற்றொரு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதற்கும் சளைக்காமல் அர்ஜென்டினா அணி வீரர்கள் பதிலடி கொடுத்தனர். மாசெல்லி ஒரு கோல் அடித்து அணியை மீண்டும் சமன் செய்தார்.

இறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினா அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-