ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி: இந்தியா கால் இறுதிக்கு முன்னேற்றம்!

ரியோடி ஜெனிரோ:

ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் ஆண்கள்  ஹக்கி போட்டியில் இந்திய அணி 4-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியிடம் தோற்றது.

hockey

இது வரை நடந்து முடிந்த  4 ஆட்டங்களில் தலா  2 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற கனடா – அயர்லாந்து அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் கனடா அணி  தோல்வியுற்றது.  மற்றொரு போட்டியில்  ஜெர்மனியும், அர்ஜென்டினாவும் மோதியது. இந்த  ஆட்டம் (4-4) டிரா ஆனது.

எதிர்பாராத இந்த முடிவுகளின் காரணமாக இந்திய அணி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

இன்று  கடைசி லீக் ஆட்டத்தில்  கனடாவுடன் மோதுகிறது.  இதில் தோற்றாலும் பாதிப்பு ஏற்படாது. இன்று வெற்றி பெற்றால் பி பிரிவில் 3-வது இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

INDIAN_WOMEN_HOCKE_2791977f

அதபோல் பெண்கள் ஹாக்கி அணி இதுவரை  4 போட்டியில்  விளையாடி 3 தோல்வி, ஒரு டிராவுடன்  ஒரு புள்ளியுடன் உள்ளது.

நாளை கடைசி லீக் ஆட்டத்தில் அர்ஜென் டினாவை எதிர்கொள்கிறது. இதில் மிகப்பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே காலிறுதி போட்டிக்கு தகுத் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: india, Olympic men's hockey, progress, quarter-final, sports, world, ஆண்கள் ஹாக்கி:, இந்தியா, உலகம், ஒலிம்பிக், கால் இறுதி, முன்னேற்றம்!, விளையாட்டு
-=-