ரியோ:
பிரேசில் நாட்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூர், பிஜி முதலிய சிறு நாடுகள் கூட பதக்கங்களை.. அதுவும் தங்கம்.. வென்றுள்ள நிலையில்,  உலகின் இரண்டாவது பெரிய நாடான இந்தியா பதக்கப்பட்டியலில் இடம் பெறவில்லை என்பது சோகமே.
160806091620_rio_women_india_512x288_getty_nocredit
தொடர் தோல்விகள்
ஆண்களுக்கான 20 மீட்டர் நடை போட்டியின் இறுதி சுற்றில் இந்தியாவின் மனிஷ் சிங் 13வது தர நிலையை பெற்று தோல்வியடைந்தார்.
பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் முதல் சுற்றில் 50 – ஆவது தர நிலையை பெற்று இந்தியாவின் டுட்டி சந்த் தோல்வியடைந்தார்.  .
ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியா வீரர் அங்கித் ஷர்மா தோல்வியடைந்தார்.
ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா வீரர் முகமது அனாஸ் அரை இறுதி சுற்றுக்கான தகுதி சுற்றில் தோல்வியடைந்தார்.  .
பறக்கும் இலக்கை வெவ்வேறு நிலைகளில் சுடும் ஸ்கீட் போட்டியில் இந்தியாவின் மைராஜ் அஹமது கான் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.  .
பெண்களுக்கான பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஜுவாலா குட்டா மற்றும் அஷ்வினி பொன்னப்பா ஜோடி முதல் போட்டியில் தோல்வியடைந்தார்.

சானியா
சானியா

இன்னும் பதக்கம் வெல்லும் வாய்ப்புகள்
தொடர் தோல்வியை சந்தித்தாலும் இன்னும்  இந்தியா பதக்கம் பெறுவதற்கு சில வாய்ப்புகளும் உள்ளன.
ஆண்கள் குத்துச்சண்டையில் 75 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் உஸ்பெகிஸ்தான் வீரரை காலிறுதி போட்டியில் எதிர்கொள்கிறார். இவர் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கலப்பு இரட்டையர் டென்னிஸ் ஆட்டத்தில் ரோஹன் போபண்ணா மற்றும் சானிய மிர்சா ஜோடி ஆண்டி மர்ரீ மற்றும் ஹீத்தர் வாட்சன் ஜோடியை 6–4, 6–1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இவர்களும் நம்பிக்கையளிக்கிறார்கள்.
3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்தியாவின் லலிதா பாபர் இறுதி போட்டிக்குப் முன்னேறியுள்ளார். இவரும்  நம்பிக்கை அளிக்கும் வீரராக இருக்கிறார்.
பார்ப்போம்.. இவர்களாவது இந்தியாவின் பதக்க கனவை நிறைவேற்றுகிறார்களா என்று!