வாரிசு தகராறு : கட்சியில் இருந்து மகனை நீக்கிய கட்சித் தலைவர்

ண்டிகர்

லோக்தளம் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா தனது மூத்த மகன் அஜய் சிங்கை கட்சியில் இருண்டு நீக்கி உள்ளார்.

அரியானா மாநில முன்னாள் முதல்வரான ஒம் பிரகாஷ் சவுதாலா இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவர் ஆவார். இந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக இவரது மூத்த மகன் அஜய் சிங் பதவி வகித்து வருகிறார். ஓம் பிரகாஷ் சவுதாலா த்மது ஆட்சிக் காலத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில் ஊழல் புரிந்ததாக வழக்கு தொடரப்பட்டது.

அஜய் சிங்

இந்த வழக்கில் தண்டனை பெற்ற ஓம் பிரகாஷ் சவுதாலா மற்றும் அவர் மகன் அஜய் சிங் ஆகிய இருவருக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இருவரும் டில்லியில் உள்ள திகார் சிறையில் அடைகப்பட்டனர். அஜய் சிங் தற்போது ஜாமினில் வெளி வந்துள்ளார்.

ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மற்றொரு மகன் அபே சவுதாலா தற்போது கட்சியை நிர்வகித்து வருகிறார். அஜய் சிங்கின் மகன்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அவர்களை சிறையிலிருந்த படியே ஓம் பிரகாஷ் சவுதாலா கட்சியை விட்டு நீக்கினார். ஜாமினில் வெளிவந்த அஜய் சிங் இதை எதிர்த்தார்.

வரும் 17 ஆம் தேதி லோக் தள கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு போட்டியாக அஜய் சிங் மற்றொரு செயற்குழு கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்து அழைப்பு விடுத்தார். அதை ஒட்டி ஓம் பிரகாஷ் சவுதாலா தனது மூத்த மகன் அஜய் சிங்கை கட்சியை விட்டு நீக்கி உள்ளார்.