அதிர்ச்சி: மகளை பலாத்காரம் செய்ததாக ராஜஸ்தான் தலைமை செயலாளர் மீது புகார்

ஜெய்பூர்:

ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஸ் மீனா, தனது சொந்த மகளையே பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளராக இருப்பவர் ஒம் பிரகாஸ் மீனா. இவரது மனைவி கீதா சிங். இவரும் ஐ.ஏ.எஸ். அந்தஸ்துள்ள பதவியில் இருப்பவர். இவரது மகளுக்கு தற்போது முப்பது வயது ஆகிறது. லண்டனில் படித்து வருகிறார்.

download

அவரை, அவரது தந்தையான ஓம் பிரகாஸ் மீனா பலாத்காரம் செய்து வந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை அந்த பெண் தெரிவித்துள்ளார். தனது 13 வயதில் இருந்து 15 வயதுவரை தனது தந்தை ஓம்.பிரகாஸ் மீனா பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்தார். பலாத்காரத்துக்கு உட்படுத்தினார் என்று தெரிவித்து வருகிறார்.

ஏற்கெனவே ஓம் பிரகாஸ் மீனா மீது, மனைவியை கொடுமைப்படுத்தியதாக புகார் உள்ளது.

“இத்தனை வருடம் கழித்து ஏன் புகார் சொல்கிறீர்கள்” என்று கேட்டபோது, ஓம்பிகராஸ் மனைவி மீனா சிங், “ என் கணவரது உறவினர்கள் இந்த விவகாரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என அழுத்தம் கொடுத்தனர்.  அதையும் மீறி புகார் அளித்தபோது காவல்துறையில் எப்.ஐ.ஆர். பதிய மறுத்தனர் இதன் பிறகு பொது வெளியில் தெரிவிக்கிறேன்” என்றார்.

மாநிலத்தின் தலைமைச் செயலாளராக இருப்பவர் மீது எழுந்திருக்கும் இந்த பாலியல் புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.