உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு தங்கம்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வால் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 23 வயதுடைய மிதர்வால் உலக கோப்பை தொடரில் தங்கம் வெல்வது இதுவே முதல்முறை.

prrakash

தென்கொரியாவின் சாங்வான் நகரில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஓம் பிரகாஷ் மிதர்வால் பங்கேற்று 564 புள்ளிகள் குவித்து தங்கம் வென்றார். இவரை தொடர்ந்து செர்பியாவை சேர்ந்த தமிர் மைக் 562 புள்ளிகளில் வெள்ளிப்பதக்கமும், தென் கொரியாவின் டாம்யுங் லீ 500 புள்ளிகள் பெற்று வெண்கலமும் வென்றனர். இந்தியாவின் மற்றுமொரு முன்னணி வீரரான ஜித்து ராய் 552 புள்ளிகள் எடுத்து 17வது இடம் பிடித்தார்.

ஜூனியர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி, அபித்யா பாட்டில் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது. மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த மனு பாகர், ஹீனா சித்து ஆகியோர் இறுதி சுற்றுக்கு தகுதி பெறத் தவறினர். மனு பாகர் தகுதி சுற்றில் 574 புள்ளிகளுடன் 13-வது இடமும், ஹீனா சித்து 571 புள்ளிகளுடன் 29-வது இடமும் பிடித்தனர். அணிகள் பிரிவில் மனு பாகர், ஹீனா சித்து, ஸ்வேதா சிங் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1713 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்தது.

23 வயதான மிதர்வால் உலகக் கோப்பை தொடரில் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.

கார்ட்டூன் கேலரி