டில்லி,

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் அடுத்த வாரம் பொறுப்பேற்கிறார். தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி வரும் 22 ஆம் தேதி பதவியில் இருந்து ஒய்வு பெறுகிறார்.

கடந்த 2015ம்  ஆண்டு, ஆகஸ்டு 15ந்தேதி  இந்திய தேர்தல் கமிஷனரக பொறுப்பேற்றுக்கொண்ட ஓம் பிரகாஷ் ராவ், தலைமை தேர்தல் கமிஷனராக இன்னும் ஒரு வாரத்தில் பொறுப்பேற்க உள்ளார்.

62 வயதான ராவ் ஐஏஎஸ் படித்தவர். இவர் ஏற்கனவே மத்திய பிரதேசம், பெல் தொழில் நிறுவனங்களிலும், பொதுத்துறை அமைச்சகத்திலும் பதவி வகித்தவர். அதைத்தொடர்ந்த கடந்த 2015ம் ஆண்டு தேர்தல் கமிஷனர்களில் ஒருவராக நியமனம் செய்யப்பட்டார்.

தற்போதைய தலைமை தேர்தல் கமிஷனரின் பதவிக்காலம் வரும் 22ந்தேதியுடன் முடிவடைகிறது. இதை யடுத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர்  அடுத்த வாரம் பொறுப்பேற்க இருப்பதாக கூறப்படுகிறது.