தோஹா: அடுத்த 2022ம் ஆண்டு முதல், ஓமன் நாட்டில், அதிக வருமானம் ஈட்டும் வகையினர்களுக்கு, முதன்முறையாக வருமான வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்நாட்டு நிதியமைச்சகத்தின் 2020-2024ம் ஆண்டு பொருளாதார திட்டத்தில் இது கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் எண்ணெய் விலை குறைந்தது போன்றவற்றை ஈடுசெய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நடப்பாண்டில் 28% என்பதாக இருக்கும் எண்ணெய் சாராத வருவாயை, அடுத்த 2024ம் ஆண்டில் 35% என்பதாக உயர்த்துவதற்காகவும் இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், வளைகுடா கூட்டிணைவு கவுன்சில் என்ற அமைப்பிலுள்ள 6 நாடுகளில் எதுவுமே, வருமான வரி விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டின் ஜனவரி மாதத்தில் ஓமன் நாட்டு சுல்தானாக பதவியேற்ற ஹைதாம், கடந்த மாதத்தில் இந்த இடைக்கால நிதி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.