காஷ்மீர் : குதிரைப்பேரக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை கோரும் உமர் அப்துல்லா

ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலத்தில் குதிரைப் பேரம் நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்ய வேண்டும் என உமர் அப்துல்லா கூறி உள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் பாஜக ஆதரவுடன் பிடிபி கட்சி கூட்டணி ஆட்சியை நடத்தி வந்தது. பாஜக தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் பிடிபி கடியின் ஆட்சி கவிழ்ந்தது. அதற்குப் பிறகு எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் கவர்னர் ஆட்சி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பிடிபி கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க காங்கிரஸ் மற்றும் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் நேஷனல் கான்ஃபரன்ஸ் கட்சி ஆகியவை முன் வந்தன. இதை பாஜக கடுமையாக விமர்சித்தது. இந்த கூட்டணிக்கு பாகிஸ்தானின் ஆசி உள்ளதாக பாஜக தலைவர் கவிந்தர் குப்தா கூறியது அந்த கூட்டணியினருக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று காஷ்மீர் மாநில சட்டப்பேரவையை ஆளுநர் சத்யபால் மாலிக் கலைத்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு பிடிபி கூட்டணியில் சேராத இரு நேஷனல் கான்ஃபர்னஸ் கட்சி உறுப்பினர்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்ததே காரணம் என கூறப்படுகிறது. கூட்டணியில் குழப்பம் ஏற்பட குதிரைப்பேரம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இன்று காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் நேஷனல் காங்ஃபரன்ஸ் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம், “பிடிபி கட்சியுடன் நாங்கள் இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதற்கு முக்கிய காரணம் மாநில நலன் ஆகும். நீண்டநாட்களாக சரியான ஆட்சி இல்லாமல் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. அந்தக் குழப்பத்தை களைய எங்கள் கட்சி காங்கிரஸ் மற்றும் பிடிபி கூட்டணி அரசு அமைக்க திட்டமிட்டோம். ஆனால் ஆளுநர் தற்போது சட்டப்பேரவையை கலைத்துள்ளார்.

இது குறித்து அவரிடம் எங்கள் கட்சி சட்டபூர்வமான விளக்கம் கேட்க முடியாது. ஏனெஇல் ஆட்சி அமைக்கும் உரிமையை பிடிபி கட்சி கோரியது. நாங்கள் அந்தக் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளோம். ஆகவே பிடிபி கட்சிதான் இது குறித்து விளக்கம் கேட்க முடியும்.
பாஜகவினர் எங்கள் கட்சிக்கு பாகிஸ்தான் ஆதரவுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளனர். எங்கள் கட்சியைப் போல் காஷ்மீர் ஒற்றுமைக்கு பாடுபட்ட கட்சி எதுவும் கிடையாது. எங்கள் தியாகங்களை குறைவாக மதிப்பிடக் கூடாது. இவ்வாறு கூறிய பாஜக தலைவர் கவிந்தர் குப்தா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

நாங்கள் குதிரைப்பேரம் நடத்துவதாக கூறும் பாஜகவினர் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். அவர்களிடம் உளவுத்துறை சிபிஐ உள்ளிட்ட பல புலனாய்வுத் துராஇ உள்ளன. அவைகளைக் கொண்டு அதை நிரூபிக்கட்டும். இல்லை எனில் தவறு எனக் கூறி மன்னிப்பு கேட்கட்டும்” என கூறி உள்ளார். இதே கருத்தை அவர் டிவிட்டரில் பதிந்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி