தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக முன்னாள் தமிழக தேர்தல் ஆணையாளர் மாலிக் பெரோஷ் கான் நியமனம்…

சென்னை: தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக முன்னாள் தமிழக தேர்தல் ஆணையாளர் மாலிக் பெரோஷ் கான் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக (ஓம்புட்ஸ்மேன்)  ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி மாலிக் பெரோஷ் கான் நியமனம் செய்து தமிழக கவர்னர் ஆளுநர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார்.  இவர்,  தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிகள், அலுவலர்கள் மீதான புகாரை இவர் விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.