காவிரி மேலாண்மை வாரியம்: வரும் 29ம் தேதி முதல் மெரினாவில் தொடர் போராட்டம்! வேல்முருகன்

சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி வரும் 29ம் தேதி சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே தொடர் போராட்டம் நடைபெறும் என்று தமிழக வாழ்வுரிமை  கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.

சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதித்து சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்தும்,  மெரினாவில் போராட்டம் நடத்த  அனுமதிக்கோரி விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், வரும் 29ம் தேதி முதல் மெரினாவில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதன் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்களின் சந்திப்பின்போது,  தமிழக வாழ்வுரிமை  கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். அப்போது பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி  வரும் 29ம் தேதி முதல் மெரினா உழைப்பாளர் சிலை முன்பாக தொடர் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தார்.

இதன் காரணமாக மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தற்போதுகூட மெரினாவில் போலீசார் கடுமையான பாதுகாப்புகளை மேற்கொண்டு, இளைஞர்கள் ஒன்றாக சேர அனுமதிக்க மறுத்து விரட்டியடித்து வருகின்றனர். இந்நிலையில,  வேல்முருகனின் இன்றைய அறிவிப்பு காரண மாக மீண்டும் பாதுகாப்பை பலப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.