சென்னை,

ஜினி ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி சென்னை ராகவேந்திர மண்டபத்தில்  தொடங்கியது. ரசிகர்களுடனான கூட்டத்தில் பேசிய ரஜினி அரசியல் குறித்து வரும் 31ந்தேதி அறிவிப்பேன் என்று கூறினார்.

ரசிகர்களுடனான 2வது கட்ட சந்திப்பு  இன்று தொடங்கியது. 6 நாட்கள் நடைபெற உள்ள இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் தொடக்க நாளான இன்று  சிறப்பு அழைப்பாளராக இயக்குனர் மகேந்திரன், கலைஞானம் போன்றோர் கலந்துகொண்டு பேசினர்.

தொடர்ந்து ரசிகர்களுடன் பேசிய ரஜினி,

அரசியல் தனக்கு புதிதல்ல… 1996லேயே அரசிலில் இருக்கிறேன். அரசியலில்  கஷ்ட நஷ்டங்கள் தெரிந்ததால் வர தயங்குகிறேன் என்றார்.

ஒவ்வொருவருக்கும் கட்டுப்பாடு ஒழுக்கம் மிக மிக அவசியம். தாய் தந்தை குழந்தைகளை நன்றாக கவனிக்க வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார்.

மேலும், தான் அரசியலுக்கு வருவதை ஊடகங்களே அதிக அளவில் விரும்புவதாகவும், தற்போது நிறைய ஊடகங்கள் வந்துள்ளது. சோசியல் மீடியாக்களும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக நெகடிவ் தாட்ஸ் அதிக அளவில் பரவுவாகவும், அதை பார்ப்பதை தவிருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். கட்டுப்பாடாக இருக்க தியானம் செய்யுங்கள் என்றும் கூறினார்.

போர் என்றால் தேர்தல்தானா,,  போர் வரும்போது தயாராக இருங்கள் என்றேன்.. ஆனால் போர் வந்துள்ளதா என்றும், யுத்தத்திற்கு சென்றால் ஜெயிக்க வேண்டும்… ஜெயிப்பதற்கு வீரம் மட்டும் போதாது வியூகமும் வேண்டும் என்றார்.

அரசியலில்  வரும் 31-ம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்றும் கூறினார்.

அதைத்தொடர்ந்து ரசிகர்களுடனான புகைப்படம் எடுக்கும் சந்திப்பு தொடங்கியது.