‘த்ரிஷ்யம் 2’ குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மோகன்லால்….!

--

2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. மலையாளத்தில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் ‘த்ரிஷ்யம்’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்குப் பிறகு மோகன்லால் – ஜீத்து ஜோசப் இணைப்பில் ‘ராம்’ திரைப்படம் உருவாகி வருகிறது.

‘ராம்’ படத்துக்கு முன்னதாகவே, மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணி இணைந்து ‘த்ரிஷ்யம் 2’ படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

தற்போது மோகன்லால் தனது பிறந்த நாளை முன்னிட்டு ‘த்ரிஷ்யம் 2’ படம் குறித்த அறிவிப்பை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். அது படத்துக்கான சிறிய அறிமுக டீஸராக மட்டுமே இடம்பெற்றுள்ளது.