ஆகஸ்ட் 28ம் தேதி தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம்

சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.\

இது குறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘தணிக்கை குழு அறிக்கை, தலைவர், பொருளாளர் தேர்தலுக்கான தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் வரும் 28ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.

கூட்டத்திற்கு செயல் தலைவர் ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். அன்று காலை 9 மணியளவில் நடக்கும் இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ள்து.