முத்தலாக் மசோதாவுக்கு எதிராக 11 கட்சிகள் சார்பில் மாநிலங்களவையில் மனு!

டில்லி:

மாநிலங்களையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் எதிர்க் கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ்  எம்.பி.யும், முன்னாள் அமைச்சருமான குலாம்நபி ஆசாத் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து  முத்தலாக் மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் தீர்மானத்திற்கு, அதிமுக, திமுக உள்ளிட்ட 11 கட்சிகள் கையெழுத்திட்டு மாநிலங்களவையில் வழங்கி உள்ளது.

திருத்தப்பட்ட புதிய முத்தலாக் மசோதா கடும் அமளிகளுக்கு இடையே பாராளுமன்ற லோக்சபாவில்   நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் என்று கூறி வரும் எதிர்க்கட்சிகள் இன்று அதுகுறித்து ஆலோசனை நடத்தின. அதைத் தொடர்ந்து  முத்தலாக் மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் தீர்மானத்திற்கு, அதிமுக, திமுக உள்ளிட்ட 11 கட்சிகள் கையெழுத்திட்டு மாநிலங்களவையில் வழங்கி உள்ளது.

இதன் காரணமாக முத்தலாக் மசோதா நிறைவேறுவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி