நாடக நடிகர்கள் தொழில் தொடங்க அனுமதி கேட்டு முதல்வரிடம் மனு.. பாக்யராஜ். குட்டி பத்மினி தந்தனர்..

மிழகத்தில் வாழும் அனைத்து நாடகக் கலைஞர்கள் மற்றும் கலைநிகழ்ச்சி கலைஞர்கள் அனைவரும் கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர். அவர்கள் தங்கள் தொழில் மூலம் வாழ்வாதாரம் நடத்திட வழிவகை செய்திடும் வகையில் தமிழக முதலமைச்சரிடமும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரிடமும் கோரிக்கை மன அளிக்கப்பட்டது.

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர். ஐசரி.கே. கணேஷ் வழிகாட்டுதலின்படி, திரைப்பட இயக்குனர் & நடிகருமான கே. பாக்யராஜ் தலைமையில், திரைப்பட கலைஞரும் நடிகை குட்டிபத்மினி, மருது பாண்டியன் மூவரும் சுவாமி சங்கரதாஸ் அணியின் சார்பாக நேரில் சந்தித்து கொடுத்தனர்.
அதுபற்றி பரிசீலனை செய்து, ஆவண செய்வதாக முதல்வரரும் அமைச்சரும் கூறியிருக்கிறார்கள்.

கார்ட்டூன் கேலரி