தேசிய அளவில் விதைக்கப்பட்ட வெறுப்பு விஷத்துக்கு எதிராக போராடுகிறோம்: ராகுல் காந்தி

வயநாடு:

தேசிய அளவில் விதைக்கப்பட்ட வெறுப்பு விஷத்துக்கு எதிராக நாம் போராடி வருகிறோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த பிறகு, தாம் வெற்றி பெற்ற வயநாடு தொகுதிக்கு 3 நாள் பயணமாக ராகுல் காந்தி வந்துள்ளார்.

இரண்டாம் நாளான இன்று வயநாடு கல்பெட்டாவில் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய அவர்,வெறுப்பு விஷத்தை விதைத்து நாட்டை துண்டாக்கும் வேலையில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார்.

தேசிய அளவில் வெறுப்பு விஷத்துக்கு எதிராக போராடி வருகிறோம்.  வயநாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு குடிமக்களுக்காகவும் காங்கிரஸ் கட்சியின் கதவுகள் திறந்தே உள்ளன.

நான் காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும், வயது வித்தியாசமின்றி, அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை பார்க்காமல், அவர்கள் கொள்கையை பின்பற்றுபவர்கள் என்று கவலைப்படாமல் பணியாற்ற தயாராக இருக்கிறோம் என்றார்.

ராகுல் காந்தி கேரள சுற்றுப்பயணம் செய்த இன்று, பிரதமர் மோடியும் கேரள மாநிலம் குருவாயூரில் சாமி தரிசனம் செய்தார்.

 

கார்ட்டூன் கேலரி