வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனநாயக கட்சியின் ஜோ பைடன்,  முதல் நாளிலேயே மின்னல் வேகத்தில் செயல்பட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதற்கான ஆணைகளில் கையெழுத்திட்டு உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.பதவியேற்ற முதல் நாளில் பைடன்,  நிர்வாகம் தொடர்பாக 15 ஆணைகளில் கையெழுத்திட்டதாகவும், அதிபரின் குறிப்புகள் என்று பொருள்படும் பிரசிடென்ஷியல் மெமோக்கள் -2ல் கையெழுத்து போட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அதிபராக  ஜோ பைடன் பதவி ஏற்றதும், முதல் நாளிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 15 முக்கிய ஆணைகளில் கையெழுத்திட்டு உள்ளதாக  வெள்ளை மாளிகையின் ஊடகப்பிரிவு அமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் ஜென் சகி கூறினார்.
குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகளில் இருந்து மக்கள் வருவதற்கான தடையை நீக்குதல்,
பாரீஸ்  பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் இணைதல், பருவநிலை மாற்ற சிக்கல்களை தீர்க்கும் நடவடிக்கைகள் 
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அடுத்த 100 நாட்களுக்கு மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிதல்,
மக்களுக்கு பொருளாதார உதவி,
புதிய வேலைவாய்புகள்,
ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் தவறாக எடுக்கப்பட்ட முடிவுகளை திரும்ப பெறுதல் 
உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா டிரம்ப் நிர்வாகத்தில் வெளியேறியது.  நிதியுதவியையும் நிறுத்தியது ரத்து சய்யப்பட்டு, வருங்காலத்தில் உலக சுகாதார கூட்டத்திலும் பங்கேற்கும்.
கறுப்பினத்தவர்கள், லாட்னோ, பூர்வீக அமெரிக்கர்கள், ஆசிய அமெரிக்கர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், எல்ஜிபிடி பிரிவினர், மதச்சிறுபான்மையினர் ஆகியோர் அனைவரையும் சமமாக நடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்படும்.
மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவில் அகதிகள் நுழையாத வகையில் ட்ரம்ப் ஆட்சியில் சுவர் எழுப்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியுதவி உடனடியாக ரத்து செய்யப்படும் 

மேலும், டிரம்ப் காலத்தின் கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டுவரும் விஷயத்தில் தாம் தாமதம் காட்டப் போவதில்லை என்பதும், கொரோனா உலகத் தொற்று காரணமாக அமெரிக்கா வரலாற்றுச் சிக்கலில் இருக்கும் நிலையில் வேகமாக முடிவெடுக்கவேண்டியதாக புதிய அதிபர் பதவி இருக்கும் என்பதும் இந்த அதிவேக உத்தரவுகள் சொல்லும் சேதிகள்.அமெரிக்க அரசில் நிர்வாக உத்தரவுகள் எனப்படும் எக்சிகியூட்டிவ் ஆர்டர்கள் என்பதன் பொருள் என்ன?நிர்வாக உத்தரவுகளை ஒரு அதிபர் பிறப்பிக்க முடியும். அவற்றுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறவேண்டியதில்லை. ஆனால், ஒரு அதிபர் இப்படி பிறப்பித்த உத்தரவு ஒன்றினை நாடாளுமன்றம் விவாதித்து நிராகரிக்க வழி உண்டு.

நாடாளுமன்ற நிராகரிப்பை தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிபர் ரத்து செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அமெரிக்க அதிபராக இதுவரை பதவியேற்ற அதிபர்களில்,  முதல் நாளில் டிரம்ப் 8 உத்தரவுகளில் கையெழுத்திட்டார். ஒபாமா 9 உத்தரவுகளில் கையெழுத்திட்டார். ஜார்ஜ் டபிள்யூ புஷ் 2 உத்தரவுகளிலும், கிளிண்டன் 3 உத்தரவுகளிலும் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.