சென்னை,

ரும் ஜனவரி 8ந்தேதி சட்டசபை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், 7ந்தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் வரும் 8ந்தேதி கூடுவதாக சட்டப்பேரவை செயலாளர் பூபதி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், வரும் 7ந்தேதி  சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்து உள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்குமாறு சட்டமன்ற திமுக கொறடா சக்கரபாணி அழைப்பு விடுத்துள்ளார்.