இதே நாள் 1983 : இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றது.

ண்டன்

டந்த 1983ஆம் வருடம் ஜூன் மாதம் 25ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றது.

கடந்த 1983 ஆம் வருடம் ஜூன் மாதம் 8 ஆம் தேதி முதல் ஜூன் 25 வரை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது.   இந்தப் போட்டியை இங்கிலாந்து நடத்தியது.   அப்போது ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 60 ஓவர்கள் பந்து வீசப்பட்டன.    குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும்  நான்கு அணிகள் இருந்தன.

குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியுஜிலாந்து, ஸ்ரீலங்கா ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன.   குரூப் பி பிரிவில் மேற்கு இந்தியா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இருந்தன.    இவைகளில் குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் அரை இறுதிக்கு முன்னேறின.   குரூப் பி பிரிவில் இந்தியாவும் மேற்கு இந்திய அணியும் அரை இறுதிக்கு முன்னேறின.

ஜூன் 22ஆம் தேதி நடந்த இரு அரை இறுதிப் போட்டிகளில் ஒரு போட்டியில் இங்கிலாந்துடன் இந்தியா மோதியது.  அந்தப் போட்டியில் 213 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணியை இந்தியா நான்கு விக்கட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.    மற்றொரு அரை இறுதிப் போட்டியில்  பாகிஸ்தான் 2 விக்கட் எடுத்து 184 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்த மேற்கு இந்திய அணி வெற்றி பெற்றது.

இதே நாள் அதாவது ஜூன் 25ஆம் தேதி அன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மேற்கு இந்திய அணி, இந்தியாவை பேட்டிங் செய்யச் சொன்னது.  இந்தியா 54.4 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்தது.   அடுத்து விளையாடிய மேற்கு இந்திய அணி 52 ஓவர்களில் 140 ரன்களுடன் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.   அதை ஒட்டி இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது.

இன்றுடன் இந்த வெற்றிக்கு 35 வயதாவது குறிப்பிடத்தக்கது