இன்றைய தினம் (ஏப்ரல்2)  கிரிக்கெட் உலகில் மறக்க முடியாத நாள்.

ஆம், 28ஆண்டு இடைவெளிக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் அணி  தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் மகேந்திரசிங் தோனியின் அதிரடியால் இந்திய கிரிகெட் அணி கடந்த 2011ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற நாள்.

ஏற்கனவே 1983ம் ஆண்டு  கபில்தேவ் தலைமையில் ஒருமுறை உலககோப்பை கைப்பற்றப்பட்டி ருந்த நிலையில், 2வதுமுறையாக 2011ம் ஆண்டு உலக கோப்பை தோனியில் அதிரடி காரணமாக கைப்பற்றப்பட்டது.

மும்பை வான்கடே மைதானத்தில் கோப்பையை வெல்லப்போவது யார் என்று லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்த நிலையில், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலோடு தொலைக்காட்சிகளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்க, அந்த… பரபரப்பான தருணம் வந்தது.

வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி ஓவரில் தோனி மட்டையுடன் களத்தில் இருக்க, கோப்பையை இந்தியா கைப்பற்றுமா என்று இந்திய ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான தெய்வங்களை வேண்டிக் கொண்டிருக்க, இலங்கை ரசிகர்களோ, அவர்கள் அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்த  நிசப்தமான நேரத்தில்,

கடைசி ஆட்டத்தின் கடைசி ஓவரின் முடிவில்,  கடைசி ரன்னை எட்ட தோனி அடித்த ஹெலிகாப்டர் ஷாட் சிக்சராகி, இந்தியாவிற்கு வெற்றிக்கோப்பையை தட்டிவந்தது.

அதுபோல, சச்சின் தன் வாழ்நாளில் இந்திய அணிக்கு ஒருமுறையாவது உலகக்கோப்பை வென்று கொடுத்து விட வேண்டும் என்ற ஏக்கமும், தோனியின் கைங்கர்யத்தால் சொந்த ஊரான மும்பையில், அவருக்கு பழக்கமான வான்கடே மைதானத்தில் அன்று நிறைவேறியது..

சச்சினை இந்திய வீரர்கள் தூக்கிக் கொண்டு மைதானத்தை வலம் வந்த காட்சியை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம்.

அன்றுமுதல் இன்றுவரை  தல தோனி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் அழியாத அச்சாக மாறிவிட்டார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அந்த காலக்கட்டத்தில், யுவராஜ் சிங் உச்சகட்ட பார்மில் இருந்ததையும் யாரும் மறக்க முடியாது. அவரது அதிரடி பேட்டிங், நேர்த்தியான பினிஷிங், பந்துவீச்சிலும் கலக்கல் என அபாரமாக செயல்பட்டு வந்தார். இந்திய அணியின் வெற்றிக்கு தோள்கொடுத்தவர்களில் இவரும் முக்கியமானவர்.

இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வென்று வரலாறு படைத்து, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட்டது.

இந்த   இறுதிப்போட்டியில் கவுதம் கம்பீர் 97 ரன்கள் எடுத்தார், எம்.எஸ்.தோனி 91 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றிகுறித்து கருத்து வர்ணனை செய்த  சாஸ்திரி, இன்றைய தினம் இந்திய கிரிக்கெட்டில் ஒரு புனிதமான நாள், இந்த தருணம் அனைவருக்கும் நன்றி , தோனியின் பெயரை  நினைவில் கொள்ளுங்கள், வரும் காலங்களில் இந்தியர்களின் காதுகளில் அந்த பெயர் தொடர்ந்து ஒலிக்கும் என்று வாழ்த்தினார். அந்த வார்த்தை இன்றுவரை உயிரோடுதான் உழன்றுகொண்டிருக்கிறது.

அன்றைய தினம் இந்தியா பெற்ற வெற்றி அன்று இரவு நெடுநேரம் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இந்திய அணி, இலங்கை அணியை உலகக்கோப்பையை கைப்பற்றி ஒன்பது வருடம் நிறைவைடைகிறது. இந்த நிலையில், அந்த இறுதிப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ். இன்று மீண்டும் ஒளிபரப்புகிறது.

தற்போது கொரோனா வைரஸ் அபாயம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியும் உலகில் நடைபெறவில்லை.  இந்த சூழலில் ஸ்டார் போர்ட்ஸ் இந்தியா வென்ற உலககோப்பை போட்டியை மறு ஒளிபரப்பு செய்கிறது.

2011ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற கடைசி தருணத்தின் வீடியோ…